திராவிட வெற்றிக் கழகம் : புதிய கட்சியை தொடங்கினார் மல்லைசத்யா

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

Nov 20, 2025 - 08:32
0 244
திராவிட வெற்றிக் கழகம் : புதிய கட்சியை தொடங்கினார் மல்லைசத்யா
மல்லைசத்யா புதியகட்சி

மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சித் தலைமை மற்றும் துரை வைகோ குறித்து விமர்சித்து வந்த மல்லை சத்யா, தனித்துச் செயல்பட்டு வந்தார்.

சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார்.

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User