Dio புள்ளிங்கோவின் அராஜகம்..! மாநகராட்சி மேற்பார்வையாளருக்கு அரிவாள் வெட்டு..! ஆவடியில் பரபரப்பு..!

கை மற்றும் காதில் வெட்டுப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Feb 19, 2024 - 08:42
Updated: 2 years ago
0 335
Dio புள்ளிங்கோவின் அராஜகம்..! மாநகராட்சி மேற்பார்வையாளருக்கு அரிவாள் வெட்டு..! ஆவடியில் பரபரப்பு..!

சென்னையை அடுத்த ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளரை, டியோ வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம். இவர் ஆவடிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சாலை போடும் பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான சாலை சுடுகாடு வாசலில் உள்ள சாலையில் தடுப்புகள் அமைத்து, 10 ஊழியர்களுடன் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவ்வழியாக செல்ல வேண்டும் என கூறி, சையது இப்ராஹிமிடம் கூறியுள்ளனர்.

 அதற்கு பணி நடக்கிறது இந்த வழியாக செல்ல முடியாது என இப்ராஹிம் கூறியதால் வாய்தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றியதில் போதையில் இருந்த நபர் தனது நண்பர்களை செல்போனில் அழைத்ததன் பேரில் DIO இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நண்பர்கள் தரையில் கத்தியை தேய்த்த படி ஆக்ரோஷமாக ஓடி சையது இப்ராஹிமை  வெட்டியுள்ளனர்.

இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், தற்போது அவை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் கை மற்றும் காதில் வெட்டுப்பட்டு பலத்த காயமடைந்த இப்ராஹிம் ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் வெட்டிவிட்டு தப்பி சென்ற நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User