ரூ.21ஆயிரம் கோடி.. புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!.. கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Apr 04, 2024 - 12:59
0 217
ரூ.21ஆயிரம் கோடி.. புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி!.. கொந்தளிக்கும் முதல்வர் ஸ்டாலின்

நாடு முழுவதும் மக்களை தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக தீவிர பிரசாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் பாஜக தலைவர்கள். 

பாஜகவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் தனது  எக்ஸ் வலைத்தள பக்கத்தில், தனியார் ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளை மேற்கோள்காட்டி மத்திய அரசை சாடியுள்ளார். 

ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?

இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர். இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு? என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User