Dhanush: தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவரா..? மீண்டும் மதுரை சம்பவம் ரெடி… விரைவில் அப்டேட்!

தனுஷ் தற்போது ராயன், குபேரா போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Apr 17, 2024 - 15:35
Updated: 2 years ago
0 267
Dhanush: தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவரா..? மீண்டும் மதுரை சம்பவம் ரெடி… விரைவில் அப்டேட்!

சென்னை: தனுஷின் ராயன் படத்தில் இருந்து விரைவில் முதல் பாடல் வெளியாகவுள்ளது. தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன், அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராயன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் பிஸியாகிவிட்டார் தனுஷ். அதேபோல், இந்தியிலும் ஆனந்த் எல் ராய் படத்தில் நடித்து வருகிறார்.  

அதன்பின்னர் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், H வினோத் ஆகியோர் கதையுடன் தனுஷுக்காக காத்திருக்கின்றனர். குபேரா ஷூட்டிங் முடிந்ததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் அடுத்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் இளன்.  

இளம் இயக்குநர்களில் கவனிக்கத்தக்க ஒருவராக வலம் வரும் இளன், தற்போது ஸ்டார் படத்தை இயக்கி வருகிறார். கவின் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஸ்டார் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இயக்குநர் இளன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனுஷுடனான கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதில் விரைவில் தனுஷுடன் இணைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

அதாவது தனுஷிடம் மதுரை பின்னணியில் ஒரு கதை சொன்னதாகவும், அதற்கு அவரும் ஓக்கே சொல்லியதாகவும் கூறியுள்ளார். மேலும், விரைவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும், தனுஷ் இந்த கதையை மிஸ் பண்ணக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார். அதன்படி தனுஷ் – இளன் கூட்டணியில் உருவாகும் படம் D 54 அல்லது D  55 ஆக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User