ஆட்சி அமைவதில் தாமதம்:  மெரினாவில் போராட்டத்திற்கு தயாராகும் தவெக, அலார்ட் ஆன  போலீஸ் 

தமிழக முதலமைச்சராக விஜய்க்கு பொறுப்பு கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட தவெக தயாரான தகவல் அறிந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

May 07, 2026 - 05:12
0 568
ஆட்சி அமைவதில் தாமதம்:  மெரினாவில் போராட்டத்திற்கு தயாராகும் தவெக, அலார்ட் ஆன  போலீஸ் 
மெரினாவில் போராட்டத்திற்கு தயாராகும் தவெக

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்எல்ஏ 5 பேர் ஆதரவு அளித்துள்ளதால் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தவெகவிற்கு தேவைப்படுகிறது. விசிக, கம்யூ கட்சிகளுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இதனிடையே நேற்றைய தினம் ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் தவெக ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனிடையே அதிமுக, திமுக இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், இதன் காரணமாக ஆளுநர் விஜய்க்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தாமதம் செய்வதாக தகவல்கள் வெளியாகியது. 

இதனால் தவெக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போரட்டம் போல மெரினாவில் போராட்டம் செய்யலாம் என த.வெ.க தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்ததையடுத்து மெரினாவில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தவெக தொண்டர் ஒருவர் இன்று காலை விஜய் நீலாங்கரை இல்லத்தில் கண்ணீர் மல்க பிரார்த்தனை வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User