குளத்தில் நிறைமாத கர்ப்பிணி சடலம்... மூழ்கடித்து கொலையா..? ராமநாதபுரத்தில் பரபரப்பு...

ராமநாதபுரம் அருகே குளத்தில் இருந்து, 9 மாத கர்ப்பிணி பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

May 02, 2024 - 07:26
0 435
குளத்தில் நிறைமாத கர்ப்பிணி சடலம்... மூழ்கடித்து கொலையா..? ராமநாதபுரத்தில் பரபரப்பு...

ராமநாதபுரத்தை அடுத்த களத்தாவூர் பகுதியில் உள்ள குளத்தில் இளம்பெண் ஒருவரது சடலம் மிதப்பதாக, அப்பகுதி மக்கள், ராமநாதபுரம் பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மேலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த நிலையில், வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், உயிரிழந்த பெண் யார் என்பது குறித்தும், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது, வேறு யாராவது கொலை செய்துவிட்டு, பெண்ணின் சடலத்தை குளத்தில் வீசிவிட்டு சென்றார்களா என்ற கோணத்தில், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User