மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றில் மிதந்த சடலம்.. கொலையா? அதிர்ந்த சென்னை!

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கூவம் ஆற்றின் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jun 19, 2024 - 11:48
0 521
மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே கூவம் ஆற்றில் மிதந்த சடலம்.. கொலையா? அதிர்ந்த சென்னை!

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகே உள்ள கூவம் ஆற்றின் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் ரயில் நிலைய கார் பார்க்கிங்கை ஒட்டி உள்ள கால்வாயில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க  சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்ததும், தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

இறந்து கிடந்தவர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? மழை வெள்ளத்திற்கு தவறி கால்வாயில் விழுந்தாரா  என்பது குறித்து மயிலாப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User