பொன்முடியை அமைச்சராக்க மறுத்த ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தல்..

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டத்துக்கு சிறிதும் மரியாதை அளிக்காமல் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதாக குற்றச்சாட்டு

Mar 18, 2024 - 13:04
0 211
பொன்முடியை அமைச்சராக்க மறுத்த ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. திமுக எம்.பி., வில்சன் வலியுறுத்தல்..

ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவருக்கு திமுக எம்.பி.,யும், வழக்கறிஞருமான வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது X தள பக்கத்தில், பொன்முடி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தித்தான் வைத்துள்ளது, ரத்து செய்யவில்லை என ஆளுநர் தனது சொந்த விளக்கத்தை அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது அபத்தமானது என்பதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். பொன்முடியை அமைச்சர் பதவியில் நியமிக்க ஆளுநர் மறுத்தது சட்டமீறலும், அரசியலமைப்பு பிரிவுக்கு எதிரானதும் ஆகும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்காரணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள வில்சன், ஒருவர் அறநெறிப்படியோ, பிற அடிப்படையிலோ அமைச்சராகத் தொடரலாமா? வேண்டாமா? என்பதை ஆளுநர் முடிவுசெய்ய இயலாது எனவும், இது முதலமைச்சரின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும்கூறி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத தமிழக ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவரை உடனடியாக திரும்பப் பெறுமாறும் குடியரசுத் தலைவருக்கு திமுக எம்.பி., வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User