கடலூரில் நடத்துனர் இல்லாமல் புறப்பட்ட பேருந்து 

போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Jan 09, 2024 - 12:56
Updated: 3 years ago
0 138
கடலூரில் நடத்துனர் இல்லாமல் புறப்பட்ட பேருந்து 

கடலூரில் நடத்துனர் இல்லாமல் புறப்பட்ட பேருந்தை நிறுத்தி தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூரில் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் பணிமனையிலிருந்து பேருந்து நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்பட்டது. நடத்துநர் இல்லாமல் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கணக்குக்காக பேருந்து நிலையம் செல்வதாக குற்றச்சாட்டி பேருந்து தடுத்து நிறுத்தினர். மேலும்  மாற்று ஓட்டுநர் பயன்படுத்தியோ அல்லது நடத்துநர் இல்லாமல் பேருந்த இயக்கினாலோ, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி  இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அந்தப் பேருந்து மீண்டும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User