தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 13, 2026 - 05:15
0 482
தன்னை இயேசுவாக சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை 
டிரம்ப் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை 

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கிறிஸ்துவ மதத் தலைவரான 14 ஆம் போப் லியோ தொடர்ந்து கண்டித்து வருகிறார். நேற்றைய தினம் செய்தியாளர்களுடன் பேசிய  டிரம்ப், போப் லியோ குற்றச்செயல்கள் மீது விருப்பம் கொண்டவராக நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தன்னை இயேசுவாக சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் அதிபர்  டிரம்ப் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில், நோய்வாய்ப்பட்ட ஒருவரின் மீது இயேசுவை போல் உடை அணிந்திருக்கும் டிரம்ப் கை வைப்பதைப் போன்று காட்சி இடம் பெற்றஉள்ளது. அதுமட்டுமின்றி,  அமெரிக்கக் கொடி, ராணுவ விமானங்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

மேலும் போப் லியோ குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில்,"போப் லியோ குற்ற விஷயத்தில் பலவீனமானவர், வெளியுறவுக் கொள்கையில் படுமோசமானவர். அவரை விட அவருடைய சகோதரர் லூயிஸை எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனென்றால் லூயிஸ் 'மெகா அமெரிக்கா கிரேட் அமெரிக்கா'வின் ஆதரவாளர். அவருக்கு அனைத்து விஷயங்களும் புரிகிறது, ஆனால், லியோவுக்குப் புரியவில்லை.

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். அமெரிக்காவுக்குள் பெருமளவு போதைப்பொருள்களை அனுப்பி, சிறையில் இருந்த கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கொலையாளிகளை நம் நாட்டிற்குள் அனுப்பிக் கொண்டிருந்த வெனிசுவேலாவை தாக்கியது ஒரு தீவிரக் குற்றமாக என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம். மேலும், அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம்.தீவிர இடதுசாரிகளுக்குச் சேவை செய்வதை நிறுத்தி, ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் ஒரு சிறந்த போப்பாக இருப்பதில் லியோ கவனம் செலுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User