தமிழ்நாடு தேர்தல் களம்: வேட்புமனு மீது இன்று பரிசீலனை...

தமிழ்நாடு, புதுச்சேரி, 40 தொகுதிகள், மக்களவைத் தேர்தல், வேட்புமனு, தாக்கல், நிறைவு, கரூர், வடசென்னை, இன்று, பரிசீலனை, Tamil Nadu, Puducherry, 40 Constituencies, Lok Sabha Elections, Nominations, Filing, Closing, Karur, North Chennai, Today, Consideration,

Mar 28, 2024 - 07:53
0 290
தமிழ்நாடு தேர்தல் களம்: வேட்புமனு மீது இன்று பரிசீலனை...

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்நாட்டில் 1,749 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று அதன் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரம், பொதுக்கூட்டம் என வாக்காளர்களை கவர அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் புதன்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி என 40 தொகுதிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 

இதனை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக  1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதில், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  மேலும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 26 பேரும், சிதம்பரம் தொகுதியில் 27 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச்-28) நடைபெறுகிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 30 ஆம் தேதி  கடைசி நாள் என்பதால், முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களுடன் களமிறங்க போகிறவர்கள் யார்? எவ்வளவு பேர்? என்பது மார்ச் 30 ஆம் தேதி மாலை வெளியிடப்படும் இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரியவரும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User