கோவை கோனியம்மன் கோயில் திருவிழா... சீர்வரிசை கொடுத்த காவல்துறையினர்..!

கோயில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

Feb 29, 2024 - 17:17
Updated: 2 years ago
0 167
கோவை கோனியம்மன் கோயில் திருவிழா... சீர்வரிசை கொடுத்த காவல்துறையினர்..!

கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவிற்கு கடைவீதி காவல்துறையினர் சீர் வரிசை கொடுத்தனர்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இத்திருவிழாவை காண கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவது வழக்கம். திருவிழாவையொட்டி பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் ஆகியவற்றையும் வழங்குவர். தேர்நிலைத் திடல் பகுதியில் துவங்கும் இந்த தேரோட்டம் ஒப்பணக்காரர் வீதி வழியாக பிரகாசம் வந்தடைந்து மீண்டும் தேர்நிலைத் திடலுக்கு சென்றடையும். 

இந்நிலையில், கோனியம்மன் கோயிலுக்கு கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர்வரிசைகள் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு வருடமும் கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து சீர் வரிசைகள் கோனியம்மனுக்கு எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டும கடைவீதி காவல் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. கோயில் நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க கடைவீதி காவல்துறையினர் பழங்கள், புடவைகள், பூமாலைகள் அடங்கிய சீர்வரிசைகளை எடுத்துச் சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User