சினிமா பின்னணி பாடகர் மூக்குத்தி முருகனின் உறவினர் மகன் கொலை..! காரணம் என்ன..? 

தருமபுரி அருகே, காணாமல் போன சிறுவனை கிணற்றில் இருந்து போலீசார் சடலமாக மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Mar 14, 2024 - 15:34
0 435
சினிமா பின்னணி பாடகர் மூக்குத்தி முருகனின் உறவினர் மகன் கொலை..! காரணம் என்ன..? 

மிட்டாரெட்டி அள்ளி காலனியை சேர்ந்த மன்மதன்-சீதா தம்பதிக்கு 10 வயது மகன் பொன்னரசு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார்.  பெற்றோர், உறவினர்கள் தேடியலைந்தும் சிறுவன் கிடைக்காததால், அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அதேப் பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற 19 வயது இளைஞர் சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்ததில், சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனே தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு மிட்டாரெட்டிஅள்ளி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவன் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சிறுவனை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவன், சினிமா பின்னணி பாடகர் மூக்குத்தி முருகனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User