சிகரெட் விலை விர்ர்ர்ரர்…பாக்கெட்க்கு ரூ.22 முதல் 25 வரை விலை உயர்வு 

புகையிலை பொருட்கள் மீதான இந்த புதிய வரி இன்று (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சிகரெட் விலை ஒரு பாக்கெட்டுக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

Feb 02, 2026 - 05:58
0 428
சிகரெட் விலை விர்ர்ர்ரர்…பாக்கெட்க்கு ரூ.22 முதல் 25 வரை விலை உயர்வு 
Cigarette prices are going up

பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வளரிளம் பருவமான 18 வயதளவில், நண்பர்களோடு ‘ஜாலியாகப்’ புகைபிடிக்கத் துவங்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகி கொள்கின்றனர். சிகரெட் பிடிப்பதை சிலர் ஸ்டைலாக, கெளரவாக நினைக்கின்றனர். சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த என்ன தான் அரசு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டாலும், நாள்தோறும் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து தான் வருகிறது. 

இதன் காரணமாகவே அரசு ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கிறது. இதனால் அடிக்கடி சிகரெட் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 1 முதல் புகையிலை பொருட்கள் மீது புதிய வரியை மத்திய அரசு விதித்துள்ளது. 

இதன் காரணமாக 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.22 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. 76 மி.மீ நீளமுள்ள பிரீமியம் சிகரெட்டுகளின் விலை அதன் பிராண்டைப் பொறுத்து, 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகமாக இருக்கும். 

பிரபலமான நடுத்தர அளவிலான சிகரெட்டான வில்ஸ் நேவி கட் (76 மி.மீ நீளம்) ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.95-க்கு விற்கப்பட்ட நிலையில், அதன் விலை ஒரு பாக்கெட்டுக்கு சுமார் ரூ.120 ஆக அதிகரிக்கிறது.கோல்ட் ஃப்ளேக் லைட்ஸ், வில்ஸ் கிளாசிக் மற்றும் வில்ஸ் கிளாசிக் மைல்ட்ஸ் போன்ற 84 மி.மீ நீளமுள்ள சிகரெட்டுகள் ஒரு பாக்கெட் (10 சிகரெட்டுகள்) ரூ.170-க்கு விற்கப்பட்ட நிலையில் இவற்றின் விலை ரூ.220 முதல் ரூ.225 வரை அதிகரிக்கிறது. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User