நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்: தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம்

தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன குசன் சேராக மாற்றப்பட்டுள்ளது. 

Jun 08, 2026 - 07:27
0 991
நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்:  தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம்
பிரத்யேக அதி நவீன குசன் சேர்  மாற்றம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் நேரக் கட்டுப்பாடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.   

காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.அலுவல் பணிகள்: மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொள்கிறார்.மதிய உணவு: மதிய உணவிற்காக அவர் வீட்டிற்குச் செல்வதில்லை. அதற்குப் பதிலாக, வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் முடித்துவிட்டு மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர்கிறார்.

எளிமையான முதல்வர் என விஜய் பெயர் எடுத்து வரும் நிலையில், அவரது சில நிகழ்வுகள் விமர்சனத்திற்கும் ஆளாகிறது. மே 10-ம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தலைமை செயலகத்தில் அவரது அறையில் நாற்காலியில் அமர்ந்து வந்தார். தற்போது அந்த நாற்காலி மாற்றப்பட்டு, அதி நவீன குசன் சேருக்கு மாறி இருக்கிறார். 

கடந்த 2-ம் தேதி முதல்வர்  விஜய் தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி (Dakshin Bharat Area, ABSM General Officer Commanding) லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி சந்தித்து பேசினார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட படத்தில் நாங்காலி அமர்ந்த லெப்டினன்ட் ஜெனரலுடன் உரையாடுவது பதிவாகி இருந்தது. 

இன்றைய தினம்  முதல்வர்  விஜய் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமார் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட படத்தில் முதல்வர் விஜய் அதிநவீன குசன் சேரில் அமர்ந்திருக்கிறார். சுமார் 6 மணி நேரம் வரை நாற்காலியில் உட்கார்ந்து பணி செய்வதால் முதல் விஜய்க்கு முதுகு வலி ஏற்படுகிறதாம். இதன் காரணமாக ப்ரத்யேகமாக வடிவமைக்க அதி நவீன குசன் சேருக்கு முதல்வர் விஜய் மாறி இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User