வாக்குச்சாவடிகளில் இந்த வசதிகள் கட்டாயம்... மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்ய பிரதா சாகு கடிதம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர  வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் 3 துறைகளுக்கு  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளார். 

Apr 05, 2024 - 13:00
0 155
வாக்குச்சாவடிகளில் இந்த வசதிகள் கட்டாயம்... மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்ய பிரதா சாகு கடிதம்

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின்  உத்தரவுப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வுதளம், மின்சார இணைப்பு வசதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் போன்றவை செய்து தர வேண்டும். 15X15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரப்படவேண்டும்.  குழந்தைகளை அழைத்து வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள், பெண்களுக்கான வசதிகளை அவசியம் செய்து தர  வேண்டும்.

கடந்த பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பணிகளை மேற்கொண்டது போல் இந்தமுறையும் அந்த தொகையை கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு எண் அளித்தல், 200 மீட்டர் எல்லைக்கோடு வரைதல், வாக்குச்சாவடிக்குள் தடுப்புகளை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பந்தல் மற்றும் சாமியானா போடுவதற்கான செலவு வேறு கணக்கில் இருந்து வழங்கப்படும் என்று கடிதத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User