புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார்.. விரைவில் தீர்ப்பு..

May 02, 2024 - 20:12
0 302
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார்.. விரைவில் தீர்ப்பு..

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலை செய்யப்பட்டு, உடல் சாக்குமூட்டையில் கட்டி கழிவுநீர் கால்வாயில் வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய முத்தியால்பேட்டை போலீசார் சோலைநகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (56) ஆகியோரை கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அருகே உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக, இன்று (02-05-2024) புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதும் கடத்தல், அடைத்து வைத்தல், பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User