தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அலார்ட்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jan 28, 2026 - 11:21
0 490
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் அலார்ட்
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் திருநெல்வேலி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் முதல் 30 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 3 ஆம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User