மாம்பழம் சின்னம் முடக்க கோரி வழக்கு: ராமதாஸ் மனு தள்ளுபடி, நீதிமன்றம் எச்சரிக்கை 

ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவையும், மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு என  இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Feb 20, 2026 - 07:03
0 511
மாம்பழம் சின்னம் முடக்க கோரி வழக்கு: ராமதாஸ் மனு தள்ளுபடி, நீதிமன்றம் எச்சரிக்கை 
ராமதாஸ் மனு தள்ளுபடி, நீதிமன்றம் எச்சரிக்கை 

மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்  என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மகன் தந்தை சொல்லை கேட்பதில்லையா  எனவும் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர். தந்தை சொல்லை மகன் கேட்பதில்லை என ராமதாஸ் தரப்பில் பதில் அளித்தது. அப்போது  அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க. விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் வாதத்தை முன்வைத்தது. 

மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது  எனவும் தெரிவித்தது.  இதனால், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விட்டு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வதா ? - ராமதாஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்க நேரிடும்  தலைமை நீதிபதி எச்சரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மனு தள்ளுபடி செய்யப்பட்டுதால் ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்புமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த அமைந்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User