Breaking: கோலிவுட்டில் அடுத்த சோகம்… இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்… அட பாவமே!

மேதகு, இராக்கதன் படங்களுக்கு இசையமைத்துள்ள பிரவீன் குமார் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்தார், அவருக்கு வயது 28.

May 02, 2024 - 12:37
Updated: 2 years ago
0 404
Breaking: கோலிவுட்டில் அடுத்த சோகம்… இளம் இசையமைப்பாளர் திடீர் மரணம்… அட பாவமே!

தஞ்சாவூர்: இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பயோபிக்காக உருவாகிய திரைப்படம் மேதகு. கடந்த 2021ல் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேக்கிங், திரைக்கதை மட்டுமில்லாமல் பாடல்கள், பின்னணி இசை ஆகியவை கூட மேதகு படத்திற்கு பலமாக அமைந்தது. அதேபோல், இராக்கதன் படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. இதனால் தமிழ்த் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருவார் என பிரவீன் குமார் மீது எதிர்பார்ப்பு கணப்பட்டது. ஆனால், காலம் என்னும் கொடிய அரக்கனின் கையில் சிக்கிய பிரவீன் குமார், மிக இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளார். 

பிரவீன் குமாருக்கு கடந்த சில தினங்களாக மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்த போதும், உடல்நிலையை சரியாக கவனிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரவீன் குமார் இன்று காலமானார். இந்த தகவலை பிரவீன் குமாரின் நண்பர் வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பிரவீன் குமார் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User