தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... தீவிர சோதனையில் வெளியான உண்மை...

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Mar 01, 2024 - 10:44
0 167
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... தீவிர சோதனையில் வெளியான உண்மை...

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. சற்று நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும், முடிந்தால் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறும் கூறி இணைப்பைத் துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட தகவலின் படி, மோப்ப நாய் பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் என சுமார் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு, தகவல் ஒரு வதந்தி எனவும் மர்மநபர் கூறியதில் உண்மையில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கூறியுள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User