பெங்களூரு குண்டு வெடிப்பு - 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!!

Mar 27, 2024 - 10:46
0 163
பெங்களூரு குண்டு வெடிப்பு - 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!!

சென்னையில் 3 இடங்கள் உட்பட,  தமிழகத்தில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு, மணல் குவாரிகளில் முறைகேடு, கட்டுமான நிறுவனங்கள் மீதான லஞ்சப்புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், குற்றவாளி குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (மார்ச்-27) சென்னை மண்ணடி பகுதிக்கு உட்பட்ட மூட்டைக்காரன் தெருவில் வசித்து வரும் அப்துல்லா என்பவரின் வீட்டில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User