பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிர பிரசாரம்... பாஜகவுக்கு அமோக வரவேற்பு

டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பால் கனகராஜ்

Apr 10, 2024 - 21:59
Updated: 2 years ago
0 225
பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தீவிர பிரசாரம்...  பாஜகவுக்கு அமோக வரவேற்பு

வடசென்னை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஆர்சி பால் கனகராஜ் சென்னை ஓட்டேரி மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பாஜக முக்கிய தலைவர்கள்,  வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வடசென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான பால் கனகராஜ், இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இன்று காலை வடசென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், ஓட்டேரி பகுதியில் உள்ள டீ கடையில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, திரு.வி.க நகர் பகுதியில் கட்சியினருடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்ட அவர், மாலை, பெரம்பூர் தொகுதியின் வியாசர்பாடி பகுதியில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User