Atlee: அடுத்து 2000 கோடி டார்க்கெட்..! ரஜினி, சல்மான் கான் கூட்டணியில் அட்லீ..?

அட்லீயின் அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 24, 2024 - 15:45
0 301
Atlee: அடுத்து 2000 கோடி டார்க்கெட்..! ரஜினி, சல்மான் கான் கூட்டணியில் அட்லீ..?

சென்னை: அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. இந்தியில் தான் இயக்கிய முதல் படத்திலேயே மரண மாஸ் காட்டினார் அட்லீ. இதனால் அவருக்கு பாலிவுட் ஹீரோக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் ஏற்பட்டுள்ளது. அட்லீயின் இயக்கத்தில் நடிக்க போட்டிப் போட்டு வருகின்றனர். ஆனால், அட்லீ அடுத்து அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.  

முன்னதாக விஜய், ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க பிளான் செய்து வந்தார் அட்லீ. இதற்காக கதை எழுதி வருவதாகவும் அட்லீ கூறியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் களமிறங்கவிருப்பதால், இனி அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்க சான்ஸ் இல்லை என்றாகிவிட்டது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்டையன் படத்தை முடித்துவிட்ட ரஜினி, விரைவில் கூலி படப்பிடிப்பில் இணையவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து அட்லீ – ரஜினி கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முக்கியமாக இப்படத்தில் ரஜினியுடன் பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் நடிக்கவுள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியில் மட்டுமே நடித்து வந்த சல்மான், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் கேமியோவாக நடித்து தெலுங்கில் என்ட்ரியானார். அதேபோல், சமீபத்தில் சல்மான் கான் கொடுத்த பேட்டியில், எல்லோரும் ஹாலிவுட் போக ஆசைப்படுகின்றனர், ஆனால், நான் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தார்.  

அதற்கேற்றபடி ஏஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார் சல்மான் கான். இன்னொரு பக்கம் அட்லீக்கும் ஆஃபர் கொடுத்து வந்ததாக பாலிவுட்டில் இருந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் ரஜினியையும் சல்மான் கானையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க அட்லீ பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளாராம். ஒருவேளை இக்கூட்டணி உறுதியானால், ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரீயிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பும் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம் ரஜினி, சல்மான் கான் படத்திற்காக அட்லீ ரெடி செய்த கதை, விஜய், ஷாருக்கானுக்கானுக்கு எழுதியதாக இருக்குமோ எனவும் ரசிகர்கள் டிஸ்கஸ் செய்து வருகின்றனர்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User