சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு:  பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வர உள்ளார். 

Feb 18, 2026 - 11:13
0 216
சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு:  பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை
பிப்.26, 27ல் தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், தலைமை தேர்தல் ஆணையரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னைக்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது, தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய உள்ளார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அவர் விரிவான ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், வருமான வரி, ED அதிகாரிகளுடனும் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொள்வார். தேர்தல் ஆணையத்தின் இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தலைமை தேர்தல் ஆணையர் டெல்லி திரும்பியவுடன், தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User