Aranmanai 4 OTT: இந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர்... ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான அரண்மனை 4!

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீஸான அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 03, 2024 - 17:07
0 394
Aranmanai 4 OTT: இந்தாண்டின் முதல் ப்ளாக் பஸ்டர்... ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான அரண்மனை 4!

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீரிஸின் 4வது பாகம் கடந்த மாதம் ரிலீஸானது. தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். அரண்மனை 4 படத்தை இயக்கியதோடு, லீடிங் ரோலிலும் சுந்தர் சி நடித்திருந்தார். அரண்மனை சீரிஸில் முதல் பாகம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அதனையடுத்து வெளியான அரண்மனை 2ம் பாகமும், மூன்றாம் பாகமும் எதிர்பார்த்தளவில் ஹிட்டாகவில்லை. இதனால் பெரிதாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸானது அரண்மனை 4.

அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ்

ஆனால், முதல் நாளில் இருந்தே அரண்மனை 4 படத்திற்கு தரமான ஓபனிங் கிடைத்தது. மேக்கிங், காமெடி என அனைத்திலும் கம்பேக் கொடுத்திருந்தார் சுந்தர் சி. அதேபோல், அரண்மனை 4-ல் ஹாரர் காட்சிகளும் செம்ம மிரட்டலாக இருந்ததாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இதனால் இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைக்க, முதல் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 கோடி ரூபாய் வசூலித்தது. தொடர்ந்தும் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய அரண்மனை 4, மொத்தம் 100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அறிவித்தது.

எந்த ஓடிடியில் அரண்மனை 4 ரிலீஸ்

தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி கேமியோவாக நடித்திருந்த லால் சலாம் உள்ளிட்ட பல படங்கள் இந்தாண்டு வெளியாகின. இவைகளில் எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி கலெக்ஷன் செய்ததாக படக்குழு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது வரையிலும் ஒரு சில திரையரங்குகளில் அரண்மனை 4 படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இதனை படக்குழுவே அறிவித்துள்ளது. 

ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதன்படி, அரண்மனை 4 டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஆனால், ஓடிடி என்ன தேதியில் வெளியாகும் என்பதை மட்டும் படக்குழு அபிஸியலாக அறிவிக்கவில்லை. நாளை (ஜூன் 4) தேர்தல் முடிவுகள் வரவிருப்பதால், இந்த வாரத்தில் அரண்மனை 4 ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அடுத்த வாரமோ அல்லது பக்ரீத் ஸ்பெஷலாகவோ ஓடிடியில் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தியேட்டரில் அரண்மனை 4 படத்தை ரசிகர்கள், டிஸ்னி ப்ளஸ் தளத்தில் பார்க்க ரெடியாக காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User