மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் குறித்து ஐகோர்ட் கேள்வி

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவு

Nov 25, 2023 - 11:57
Updated: 3 years ago
0 2.4
மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் குறித்து ஐகோர்ட் கேள்வி

தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கோ வாரண்டோ மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்? என விளக்கம் அளிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரித் தேவர் என்பவர் கோ வாரண்டோ மனு தாக்கல் செய்துள்ளார். 

மருத்துவ கல்லூரி இயக்குனர் என்பது, தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் முக்கியப்பணி என மனுவில் கூறியுள்ளார். 

இந்நிலையில், பணி மூப்பு உள்ளிட்ட எந்த விதிகளும் இல்லாமல் மருத்துவ கல்வி இயக்குனராக சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார். மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக சங்குமணி பணியாற்றிய போது கூடுதல் விலைக்கு உபகரணங்கள் வாங்கியதாக புகார் எழுந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

எனவே  மருத்துவக்கல்லூரி இயக்குனராக செயல்பட சங்குமணிக்கு தகுதியில்லை என அறிவித்து அவர் செயல்பட தடை விதிப்பதோடு, அவரை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சங்குமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User