கரிக்கட்டையான நெல்லை ஜெயக்குமார்.. கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு.. அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சித்தலைவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாலை.

May 04, 2024 - 13:31
0 316
கரிக்கட்டையான நெல்லை ஜெயக்குமார்.. கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு.. அண்ணாமலை எழுப்பும் சந்தேகம்


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக மீட்கப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து விசாரிக்க நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளார் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி சிலம்பரசன். 

ஜெயக்குமாரின் கொடூர மரணம் திருநெல்வேலியில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த மரணம் குறித்தும் அவரது மரண வாக்குமூலம் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. 

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User