Andrea: கவினுடன் மோத தயாரான ஆண்ட்ரியா..? செம்ம வெயிட்டான ரோல் தான் போங்க!

கோலிவுட்டில் கவனித்தக்க ஹீரோவாக வலம் வருகிறார் கவின். அவரது அடுத்தப் படத்தில் ஆண்ட்ரியா கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Apr 02, 2024 - 16:03
0 266
Andrea: கவினுடன் மோத தயாரான ஆண்ட்ரியா..? செம்ம வெயிட்டான ரோல் தான் போங்க!

சென்னை: ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், சீரியல் நடிகர் என வலம் வந்த கவின், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது முதல் கவினுக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இதனால் ஹீரோவாக ப்ரொமோஷன் ஆனார் கவின். ஆரம்பத்தில் பெரிய சக்சஸ் இல்லையென்றாலும் டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்து வருகிறது. அதன்படி தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

இதனையடுத்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தான் கவினின் 7வது படம் குறித்து சில அப்டேட்கள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தை புதுமுகமான விக்ரனன் அசோக் என்பவர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக இந்தப் படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்ட்ரியா கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கவிருப்பதும் அதிக ஹைப் கொடுத்துள்ளது.  

இதுவரை ரொமான்ஸாக நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்த ஆண்ட்ரியா, கவின் 07 படம் மூலம் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கவுள்ளார். இதனால் கவின் முதன்முறையாக ஆக்‌ஷன் ஜானர் மூவியில் நடிக்கிறாரா என்றும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்றும், இதுபற்றி விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User