Ambani Son: அம்பானி மகன் pre-wedding... ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் செய்த வேலையா இது..?

குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்று வரும் அம்பானி வீட்டு விசேஷத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் மேடையில் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Mar 03, 2024 - 16:14
0 337
Ambani Son: அம்பானி மகன் pre-wedding... ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் செய்த வேலையா இது..?

ஜாம்நகர்: பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண நிகழ்ச்சி களை கட்டத் தொடங்கியுள்ளது. இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட் மகள் ராதிகாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. அவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து திருமணத்திற்கு முந்தைய pre-wedding நிகழ்ச்சி, மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். 

பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, சவுதி அராம்கோவின் தலைவர் யாசிர் அல்-ருமையன், டிஸ்னி சிஇஓ பாப் இகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், இயக்குநர் அட்லீ உட்பட திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். ஆட்டம், பாட்டம், இசை நிகழ்ச்சி என அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி விழாக் கோலமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் மூவரும் ஒன்றாக மேடையேறினர். இதனைப் பார்த்த விருந்தினர்கள் கண்டிப்பாக எதோ சம்பவம் நடக்கப் போகிறது என காத்திருக்க, கடைசியில் அதுவும் நடந்தேறியது. அதன்படி ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் மூன்று பேரும் மேடையில் ஒன்றாக நடனம் ஆடி அசத்தினர். ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒலிக்க, அதற்கு பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் ஸ்டெப் போட்டு கலங்கடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, ஒரு படத்தில் இந்த மூவரும் சேர்ந்து நடிப்பார்களா என விவாதம் நடத்த தொடங்கிவிட்டனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User