Ajith: விடாமுயற்சியில் ரிஸ்க் எடுத்த ஆரவ்… அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் Gift..? லைஃப் டைம் செட்டில்மெண்ட்

விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் ஆரவ் நடித்த கார் சேஷிங் மேக்கிங் வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதற்காக ரிஸ்க் எடுத்து நடித்த ஆரவ்க்கு அஜித் தரமான அன்பளிப்பு கொடுத்து மிரள வைத்துள்ளாராம்.

Apr 09, 2024 - 12:10
0 550
Ajith: விடாமுயற்சியில் ரிஸ்க் எடுத்த ஆரவ்… அஜித் கொடுத்த சர்ப்ரைஸ் Gift..? லைஃப் டைம் செட்டில்மெண்ட்

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. ரோடு ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித்துக்கு நடந்த விபத்து குறித்த வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அதில் அஜித்தும் ஆரவ்வும் ஹம்மர் ரக காரில் பயணிக்க, அது சாலையோரம் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் அஜித், ஆரவ் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், இந்த ஆக்ஸிடண்ட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு விட்டனர். பைக், கார் சேஷிங் காட்சிகளில் அஜித் ரிஸ்க் எடுத்து நடிக்க தயங்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தமுறை அவருடன் ஆரவ்வும் ரிஸ்க் எடுத்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.  

விடாமுயற்சியில் நடிக்கத் தொடங்கியது முதலே அஜித்தின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டார் ஆரவ். தற்போது விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், அஜித்துடன் ஆரவ்வும் பைக் டூர் செல்வதை பார்க்க முடிகிறது. இதனையடுத்து ஆரவ்க்கு சர்ப்ரைஸ்ஸாக கிஃப்ட் கொடுத்து அசத்தியுள்ளார் அஜித். அதாவது 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய காஸ்ட்லியான ரேஸ் பைக் ஒன்றை ஆரவ்க்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளாராம். இதனை எதிர்பார்க்காத ஆரவ் மகிழ்ச்சியில் அஜித்தை கட்டியணைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளாராம்.

1990களில் அஜித்துக்கு ஹிட் படங்கள் கொடுத்த அறிமுக இயக்குநர்களுக்கு பைக், கார் வாங்கிக் கொடுத்து அழகுப் பார்த்தவர் அஜித். இயக்குநர்கள் எஸ்ஜே சூர்யா, ஏஆர் முருகதாஸ் என இந்த லிஸ்ட்டில் உள்ளனர். அதன்பின்னர் சமீபத்தில் தனது ரசிகர் ஒருவருக்கு 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் பரிசாக கொடுத்தார் அஜித். அந்த வரிசையில் ஆரவ்வும் அஜித்திடம் இருந்து பைக்கை அன்பளிப்பாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User