Ajith Shalini: ’உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..’ அஜித், ஷாலினியின் அமர்க்களமான காதல் கொண்டாட்டம்!

அஜித்தும் ஷாலினியும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தமிழ்த் திரையுலகில் மிகச் சிறந்த நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வரும் இருவரும், தங்களது காதலை கலர்ஃபுல்லாக கொண்டாடியுள்ளனர்.

Mar 18, 2024 - 13:21
0 281
Ajith Shalini: ’உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..’ அஜித், ஷாலினியின் அமர்க்களமான காதல் கொண்டாட்டம்!

காதல் மன்னன், ஆசை நாயகன் இப்படி ரசிகர்களால கொண்டாடப்பட்ட அஜித், இப்போ மாஸ் ஹீரோவா மஜா பண்ணிட்டு இருக்கார். சால்ட் & பெப்பர் லுக்ல சம்பவம் பண்ணாலும், தன்னோட காதல் கோட்டைல இப்பவும் நான் தான் ராஜா-ன்னு ப்ரூஃப் பண்ணிருக்கார்ன்னு சொல்லலாம். அஜித் முன்னணி ஹீரோவா வளர்ந்து வந்த நேரம், அவருக்கு பல ஹீரோயின்கள் Propose பண்ணதா கோலிவுட்ல ஒரு டாக் உண்டு.  

ஆனாலும் யாருக்கும் அசராத அஜித், அமர்க்களம் மூவில நடிச்சப்போ ஷாலினிகிட்ட சரண்டர் ஆனாங்க. அமர்க்களம் படத்துல Rugged Boy-ஆ கெத்து காட்டினாலும், Behind the Scene-ல ஷாலினி கூட கண்ணாலயே காதல் பேசிருக்கார் அஜித். இதெல்லாம் தெரிஞ்சு தான் என்னவோ, ‘உன்னோட வாழாத வாழ்வென்ன வாழ்வு..’ன்னு அஜித்துக்காக ஷாலினி உருகுற மாதிரி மெலடியும் வச்சிருப்பார் டைரக்டர் சரண்.  

1999ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் இப்ப 25 இயர்ஸ் Complete பண்ணிடுச்சு. அப்போ அஜித், ஷாலினியோட காதலுக்கும் இப்ப 25 வயசுன்னு தெரிஞ்சுக்கலாம். ரசிகர்கள் மறந்தாலும் காதலர்கள் நாங்க மறக்கலன்னு சொல்லாம சொல்லிருக்காங்க அஜித்தும் ஷாலினியும். நண்பர்கள் சூழ கேக் வெட்டி தங்களோட 25வது ஆண்டு காதலை கொண்டாடித் தீர்த்திருக்காங்க. இந்த வீடியோ தான் இப்ப சோஷியல் மீடியாஸ்ல வைரலாகிட்டு இருக்கு, இதுக்கு வாழ்த்து சொல்ல கமெண்ட்ஸ் ஏரியா பக்கம் போன ரசிகர்கள், போகுற போக்குல “அண்ணே அந்த விடாமுயற்சி அப்டேட் எப்ப வரும்ன்னு..” கொளுத்திப் போட்டு எஸ்கேப் ஆகிருக்காங்க.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User