Ajith: அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இரவில் அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அதுபற்றிய உண்மையான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Mar 08, 2024 - 15:37
0 339
Ajith: அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை.. இப்போ எப்படி இருக்கார்ன்னு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட்

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை வந்திருந்த அஜித், நேற்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அட்மிட்டானார். இது சாதாரண பரிசோதனைக்காக தான் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று இரவு அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  

இதனால் அஜித்தின் ரசிகர்களும் திரையுலகினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அஜித்துக்கு என்ன ஆனது, எதற்காக மூளையில் அறுவை சிகிச்சை என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில் அஜித்தின் தற்போதைய உடல்நிலை முதல் அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி வரை அனைத்து தகவல்களும் கிடைத்துள்ளன. அதன்படி அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சையெல்லாம் செய்யவில்லை என்றும், அது சாதாரணமான ஒரு ட்ரீட்மெண்ட் மட்டுமே என்றும் தெரியவந்துள்ளது. 

அஜித்தின் நெருங்கிய நண்பர்களான ஆர்ட் டைரக்டர் மிலன். மாரடைப்பு காரணமாக விடாமுயற்சி படப்பிடிப்பின் போது அஜர்பைஜானில் உயிரிழந்தார். அதேபோல், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு நெருங்கிய நண்பரான வெற்றி துரை சாமியும் விபத்தில் உயிரிழந்தார். இந்த இரண்டு பேரின் மரணங்களும் அஜித்துக்கு மனதளவில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. இதனால் ஸ்ட்ரோக் சம்பந்தமான பரிசோதனை செய்துகொள்வதற்காக தான் அப்போலோ சென்றுள்ளார். 

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூளையில் இருந்து காது பகுதிக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு மட்டும் சின்னதாக ஒரு ட்ரீட்மெண்ட் எடுக்கப்பட்டதாம். இது ரொம்பவே சாதாரணமான ஒன்று தான் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் இந்த சிகிச்சைக்குப் பின்னர் அஜித் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டு இப்போது நலமோடு இருப்பதாகவும் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே அஜித்துகு மூளையில் அறுவை சிகிச்சை என்று வெளியான செய்திகள் எல்லாம் வதந்தி என்பதும் உறுதியாகியுள்ளது.  

இதனிடையே அஜித்தின் உடல்நிலை குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மாதவன், சிவகார்த்திகேயன், அதர்வா, இயக்குநர்கள் சிறுத்தை சிவா, மகிழ் திருமேனி என ஏராளமான திரை நட்சத்திரங்கள் அவரது மேனேஜருக்கு செல்போனில் தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அஜித்தின் சிகிச்சை பற்றிய உண்மையான தகவல்கள் வெளியானதால், இப்போது அவரது ரசிகர்களும் பதற்றத்தில் இருந்து மீண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User