Ajith Biriyani: இன்னைக்கு ஒரு பிடி… Cook With AK… பிரியாணி மாஸ்டராக மாறிய அஜித்!

விடாமுயற்சி படக்குழுவினருடன் அஜித் பைக் டூர் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலான நிலையில், தற்போது அஜித் பிரியாணி மாஸ்டராக மாறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Mar 22, 2024 - 11:06
Updated: 2 years ago
0 228
Ajith Biriyani: இன்னைக்கு ஒரு பிடி… Cook With AK… பிரியாணி மாஸ்டராக மாறிய அஜித்!

அல்டிமேட் ஸ்டார் அஜித்-ன்னு பேரு வச்சாலும் வச்சாங்க, மனுஷன் எல்லா ஏரியாவுலயும் கலந்துகட்டி ஸ்கோர் பண்ணிட்டு இருக்கார். ரசிகர்கள் எல்லோரும் விடாமுயற்சி அப்டேட் எப்ப வரும், ரிலீஸ் தேதி என்னன்னு எதிர்பார்த்துட்டு இருக்க, அஜித்தோ, ஜாலியா பைக்ல ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. இந்த முறை விடாமுயற்சி டீமையும் பைக் ட்ரிப்ல சேர்த்துக்கிட்டது தான் ரசிகர்கள பக்குன்னு பதற வச்சிருக்கு. லைகா-ல பட்ஜெட் இல்ல… அதனால தான் விடாமுயற்சி ஷூட்டிங்க்கு பிரேக் விட்டுருக்காங்கன்னு ஒரு டாக் போய்ட்டு இருக்குது. அதுவும் இன்னும் ஒரு ஷெட்யூல் முடிஞ்சா மொத்தப் படமும் ரெடியாகிடுமாம். 

இந்த நேரத்துல தான் இடியாப்ப சிக்கல் மாதிரி விடாமுயற்சி ஷூட்டிங்க்கு பிரேக் விட, அஜித்தும் விட்டா போதும்ன்னு பைக்க எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு. வழக்கமா அஜித்தோட பைக் ட்ரிப் போட்டோஸ், வீடியோஸ்லாம் ரசிகர்கள் தான் ட்ரெண்ட் செய்வாங்க. ஆனா, இப்ப அஜித்தோட மேனேஜரே களத்துல இறங்கி, அஜித்தோட பைக் டூர் போட்டோஸ் & வீடியோஸ்ஸ டிவிட்டர்ல தெறிக்க விட்டுட்டு இருக்காரு. 

அஜித் கால் மேல கால் போட்டு ரெஸ்ட் எடுக்குறதா இருக்கட்டும், தன்னோட ட்ரூப்ல ஒருத்தருக்கு பைக் ட்ரைவ் பண்ண சொல்லிக் கொடுக்குறதா இருக்கட்டும், கிடைக்குற கேப்ல ஸ்நூக்கர் விளையாடுறதுன்னு, பப்ளிசிட்டிலாம் கொஞ்சம் அன்லிமிட்டடா தான் போய்ட்டு இருக்கு. இதையெல்லாம் தூக்கி சாப்டுற மாதிரி, ஒரு ப்ரொஃபஷ்னல் குக்கையே மிஞ்சுற அளவுக்கு அஜித் பிரியாணி குக் பண்ற வீடியோவும் வைரலாகிட்டு இருக்கு. பிரியாணி மாஸ்டரா அவரு ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருவார் போல. 

ஏற்கனவே கோலிவுட்ல நிறைய பேரு அஜித்தோட பிரியாணி பத்தி பக்கம் பக்கமா பேசி ஹைப் கொடுத்துருந்தாங்க. இப்ப அஜித் பிரியாணி குக் பண்றத வீடியோவாவே ரிலீஸ் பண்ணி பலரையும் ஏங்க வச்சிருக்காங்க. ஆனாலும், சில நெட்டிசன்கள், “அடேங்கப்பா அண்ணே பல தொழில்கள தெரிஞ்சு வச்சிருக்காரப்பா… விடாமுயற்சி 100 கோடி கலெக்‌ஷன் பண்ணுதோ இல்லையோ… அவரு பிரியாணி கடையா போட்டா பல கோடி வசூல் பண்ணிடுவார்ன்னு..” ஜாலியா கமெண்ட்ஸ் பண்ணிட்டு வர்றாங்க.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User