பாலில் கலப்படம் செய்தவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்

இது தொடர்பாக போலீசார் பாலில் கலப்படம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dec 21, 2023 - 18:07
Updated: 3 years ago
0 170
பாலில் கலப்படம் செய்தவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்

பாலில் கலப்படம் செய்த இரண்டு பால் வியாபாரிகளை கையும் களவுமாக பிடித்து வாலிபர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான மணிக்கூண்டு பகுதியில் ஒரு மறைவான இடத்தில் பால் வியாபாரிகளான வாட்டாத்திக்கோட்டை, கொல்லைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் மணிவேல் ஆகிய இருவரும் பாலில் மர்மமான ரசாயன திரவத்தை கலந்து கொண்டிருந்ததை அப்பகுதியாக வந்த கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா சிராஜ் என்பவர் பார்த்துவிட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாலில் கலப்படம் செய்த பொருள் என்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பாக போலீசார் பாலில் கலப்படம் செய்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User