மக்களவைத் தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது உண்மை தான் - நடிகர் சத்யராஜ் மகள் வெளியிட்ட அறிக்கை...

Mar 02, 2024 - 21:15
0 236
மக்களவைத் தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது உண்மை தான் - நடிகர் சத்யராஜ் மகள் வெளியிட்ட அறிக்கை...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு ஒரு கட்சியிடமிருந்து அழைப்பு வந்தது உண்மை தான் என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " வணக்கம், எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்கு பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்வி நீங்கள் எம்.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்ங்கற ஆசை இருக்கா? மந்திரி பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்குப் பிரசாரம் செய்வாரா? என இப்படி பல கேள்விகள். நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. 

மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிடமிருந்து அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும், இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழர், தோழர் சத்யராஜ் அவர்களின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்" என திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User