“இந்த முறை அஜித் சாருடன் நடிப்பது உறுதி” - பிரசன்னா நெகிழ்ச்சி  

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தானும் இணைந்துள்ளதாக நடிகர் பிரசன்னா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

Oct 03, 2024 - 18:12
0 308
“இந்த முறை அஜித் சாருடன் நடிப்பது உறுதி” - பிரசன்னா நெகிழ்ச்சி  
prasanna

தமிழில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ‘ட்ரிபிள் ஏ’ ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்டத் திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரை வைத்து ‘குட் பேட் அக்லி’ என்கிற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அப்படத்துக்கு அடுத்ததாக இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அதிரி புதிரி ஹிட் ஆனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அஜித் கேங்ஸ்டர் லுக்கில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே பெரிதும் கொண்டாடப்பட்டது. 

இத்திரைப்படத்தின் நாயகியாக த்ரிஷாவும் முக்கியப் பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனிலும் நடித்து வருகின்றனர் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் நடிகர் பிரசன்னா தானும் இத்திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். 

“இந்த முறை நாம் அனைவரும் விரும்பும் தல அஜித் சாரின் படத்தில் நடிப்பது உறுதியான தகவல்தான்.  எனது கனவு நனவான தருணமாக இது அமைந்திருக்கிறது. மங்காத்தா திரைப்படத்திலிருந்து நான் அஜித் சாரின் படங்களில் இருப்பதாக யூகித்து சமூக வலைதளப் பக்கங்களில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துகளை பதிவிடுவார்கள். ஆனால், கோப்பையிலிருந்து உதடுக்குச் செல்வதற்குள் தடுமாறி சறுக்கியிருக்கிறது. ஆனால் இப்போது நான் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். இப்போதே பல விஷயங்களை சொல்ல முடியாது. என்னுடைய முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கிவிட்டது. அஜித் சார் இப்படி இருப்பதனால்தான் அவருக்கு ரசிகர்களின் அளப்பரிய அன்பு கிடைக்கிறது. நீங்கள் நான் நினைத்தது போலவே ரொம்ப பணிவானவர் அஜித் சார்." என்று நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார். 

சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் பிரசன்னாவுக்கு தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User