ராமர் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி புகார்

ஒரு கலவரத்தை தூண்டும் விதமாக வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

Jan 19, 2024 - 12:51
Updated: 3 years ago
0 223
ராமர் குறித்து அவதூறாக பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து முன்னணி புகார்

ஸ்ரீ ராமரை இழிவுபடுத்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வெளியிட்ட ஆதி தமிழர் பேரவையின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி கட்சியினர் மாநகர காவல் ஆணையாளர் சந்தித்து மனு அளித்தனர்.

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு மிகப்பெரிய அளவில் கோயில் கட்டி விரைவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.இதற்காக இந்து அமைப்பினர் மட்டும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.இதற்காக இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்து முன்னணி நெல்லை மாவட்ட செயலாளர் சுரேஷ் என்பவர் தனது ஆதரவாளர்கள் உடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில்,நெல்லை மாவட்டம் ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ராமபிரானை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.நீ கொலைகார பயல் தானே இப்பதான் உன் கேஸ் டீடைல் பார்த்தேன்,பொண்டாட்டியை சந்தேகப்பட்டு கேவலப்படுத்தி தீக்குளிக்க செஞ்சவன் தானே, உன் சில்லறை சேட்டை எல்லாம் வடக்கே வச்சுக்கோ தமிழ்நாட்டில் வச்சிகாதே என்பது போன்ற வசனத்தை சூர்யா பேசுவது போலும், ராமபிரான் குற்றவாளிபோல் கேட்பது போலவும் சூர்யா நடித்த சிங்கம் படத்தை வெளியிட்டு ஒரு கலவரத்தை தூண்டும் விதமாக வெளியிட்டுள்ளார்.அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User