பூஜையுடன் தொடங்கிய ஆரி அர்ஜுனனின் "ரிலீஸ்" திரைப்படம்... படக்குழுவினர் உற்சாகம்... 

Mar 08, 2024 - 20:02
0 234
பூஜையுடன் தொடங்கிய ஆரி அர்ஜுனனின் "ரிலீஸ்" திரைப்படம்... படக்குழுவினர் உற்சாகம்... 

MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று (மார்ச் 8) எளிமையான பூஜையுடன், இனிதே தொடங்கியது. 

சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையப்படுத்தி அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில்,  இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் L.R.சுந்தரபாண்டி அமைத்துள்ளார்.

படத்தின் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனனும், நாயகியாக தீப்ஷிகாவும் நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா,  இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். போடா போடி, வெண்ணிலா கபடி குழு படங்களின் ஒளிப்பதிவாளர் J.லக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸ்களுக்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி இப்படத்தில் இணைந்துள்ளார். சாமி 2, பென்குயின், படங்களின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய திவ்யா இப்படத்திற்கு காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார். சென்னையை அடுத்த மஹேந்திரா சிட்டி பகுதியில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User