Aadujeevitham OTT Release: பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

பிருத்விராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கிய ஆடுஜீவிதம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 06, 2024 - 17:45
0 2
Aadujeevitham OTT Release: பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

சென்னை: பிருத்விராஜ் நடிப்பில் மார்ச் 28ம் தேதி ரிலீஸான ஆடுஜீவிதம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பிளஸ்ஸி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதேபோல், பிருத்விராஜ் ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருவான ஆடுஜீவிதம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸானது. முன்னதாக இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன. 

நஜீப் என்பவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து ஆடுஜீவிதம் என்ற நாவலை எழுதினார் பென்யமின். அந்த நாவலை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற அதே தலைப்பில், படமாக எடுத்தார் பிளஸ்ஸி. நாவலாக வெளியான போதே கேரள மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஆடுஜீவிதம், சினிமாவாகவும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாஸ் காட்டியது.  

பிருத்விராஜ் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை, திரைக்கதை, மேக்கிங், சினிமோட்டோகிராபி என ஆடுஜீவிதம் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆடுஜீவிதம் மே 26ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாம். இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User