‘யெல்லோ புக்’ விதியை மீறுகிறாரா சி.எம்.விஜய்?’

முதல்வர் விஜய்க்கு தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல்தான் தனி நபரை தன் பாதுகாவலராக வைத்துள்ளாரா.. பிறகு மக்களுக்கு எப்படி போலீஸ் மீது நம்பிக்கை இருக்கும்?' என்று அ.தி.மு.க.வின் இன்பதுரை எம்.பி. எடுத்துவிட்டிருக்கும் பஞ்சாயத்துதான் பாதுகாப்பு வட்டாரத்தில் தீயைப் பற்றவைத்திருக்கும் சர்ச்சை!

Jun 10, 2026 - 05:57
0 338
‘யெல்லோ புக்’ விதியை மீறுகிறாரா சி.எம்.விஜய்?’
ரிப்போட்டர்

தமிழக முதல்வர் விஜய் தவெகவை தொடங்கி வெளியே வந்தபோது ரசிகர்கள், தொண்டர்களின் அன்புப் பாய்ச்சலால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியானது. அப்போதுதான் நயீம் மூலம் எனும் நபரை தனது பர்சனல் செக்யூரிட்டியாக நியமித்தார். துபாயில் மிகப்பெரிய செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வரும் நயீம் மூலபாவின் செயல்பாடுகள், விஜய்க்கு பக்காவாக செட்டானது. தனி நபராக விஜய்யின் இரும்பு நிழலாக நிற்பது மட்டுமில்லாமல், தவொகவின் எவ்வளவு பெரிய நிகழ்வுகளுக்கும் தனது படையை இறக்கிவிட்டு பாதுகாப்பு பணிகளை செய்துதந்தார் மூஸா விளைவு முதல்வரான பிறகும் அவரை தன் தனி பாதுகாவலராகவே வைத்துக்கொண்டுள்ளார் விஜய்.

முதல்வரின் வீடு, தலைமைச் செயலகம் மட்டுமில்லாமல் அரசு நிகழ்வுகள் த.வெ.க அரசியல் நிகழ்ச்சிகள் என எங்கும் முதல்வரின் நிழலாக மூஸா தொடர்கிறார். இது சலசலப்பைக் கிளப்பிய நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியான இன்பதுரை, சென்சிடல் ஆலோசனைகளில் கூட தனி நபர் முதல்வரோடு இருப்பது மாநில பாதுகாப்புக்கு சவாலானது' என்று விமர்சனத்தைக் கொளுத்திப் போட்டார்.

தி.மு.க.வின் முக்கிய முகங்கள் சிலரும் இதை வழிமொழிந்தனர். அரசு நிர்வாக அனுபவமில்லாதவர் விஜய் எல்லாவற்றையும் இப்போதுதான் கற்றுவருகிறார். மாநில பாதுகாப்பு, தேச பாதுகாப்பு குறித்த விஷயங்களை தலைமைச் செயலகத்திலும், காரில் பயணிக்கும் போதும் தன் முகாம் அலுவலகமான வீட்டிலும் அதிகாரிகளோடு அவர் ஆலோசிக்க வேண்டியிருக்கும் சில ரசசிய முடிவுகளை எடுக்கவும் ரகசிய உத்தரவுகளை இடவும் வேண்டியிருக்கும். இப்படியான சூழலில் தனி நபரை அருகில் வைத்துக்கொண்டே இருப்பது சரியல்ல என்று தங்கள் பங்குக்கு தாக்குதலை நடத்திக்கொண்டுள்ளனர்.

இந்த விமர்சனங்களுக்கு 'சசிகலா எந்த துறையின் அதிகாரியாக இருந்தார்? முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தலைமைச் செயலகம். அரசு நிகழ்வுகள் என எல்லாவற்றிலும் அவரது நிழலாகவே வலம் வந்தாரே! அமைச்சர்களும் அரசு செயலர்களும் காவல்துறையின் உச்ச அதிகாரிகளும் ஜெ.வை விட மிக அதிகமாக சசிகலாவை பார்த்துதானே நடுங்கினார்கள் திமுக அரசாங்கத்தில் கருணாநிதி, ஸ்டாலின் குடும்பத்தினர் எல்லா அரசு நிகழ்வுகளிலும் பிரதாளமாக இருந்தார்களே அதுவெல்லாம்  விதிமீறல் இல்லையா? என்று கோவை திருச்சி மாவட்ட தவெக நிர்வாகிகள் சோஷியல் மீடியாவில் பாய்ச்சல் காட்டினர்.

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், எம்.ஜி. ஆரை இவ்விஷயத்தில் இழுத்துவிட்டார். அவரிடம் பேசியபோது, 'அன்று எம்ஜிஆ ர் செய்ததை இன்பதுரை வசதியாக மறந்துவிட்டு பேசுகிறார் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது சங்கர் தர்மலிங்கம், ராமகிருஷ்ணன், முத்துநாடார் சிங் உள்ளிட்டோரை தனது தனிப்பட்ட பாதுகாவலர்களாக வைத்திருந்தார். கட்சி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் அரசு நிகழ்வுகளிலும் அவர்களில் ஒருவர் முதல்வரோடு இருந்தனர். சொல்லப்போனால் எம்ஜிஆர்ன் பாதுகாப்புமிகு அரசை விடவும் தனிப்பட்ட பாதுகாவலர்களுக்கே முன்னுரிமை அளித்தார். இதை அவரின் மெய்க்காவலர்களில் ஒருவரான கே.பிராமகிருஷ்ணன் எழுதிய எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் புத்தகத்தில் விளக்கியுள்ளார். அமைச்சராக உள்ள ஒருவர் தனக்கு தேவைப்படும் பட்சத்தில் வெளியாட்களை அரசு விதி அனுமதிக்கிறது. முதல்வர் விஜய் எந்த விதிமீறலையும் நிகழ்த்தவில்லை" என்றார்.

இவை அனைத்தையும் விளக்கி நாம் அதிமுக ராஜ்யசபா எம்,பி இன்பதுரையிடம் கேட்டபோது பாதுகாப்பு தொடர்பாக சில விதிகள் உள்ளன. ராஜ்ய சபா கொலைக்கான காரணத்தை ஆராய்ந்த வர்மா கமிஷன், மத்திய உள்துறைக்கு ஒரு பரிந்துரையை கொடுத்தது அப்பரிந்துரை படி ஃப்ளு யெல்லோ புக் என இரண்டு உள்ளன. அதன்படி யெல்லோ புக் வகையின் கீழ் வரும் முதலமைச்சர் பதவியில் உள்ள நபருக்கு எவ்வகையான பாதுகாப்பு தர  வேண்டும் என்று ஒரு ப்ரோட்டோகால் உள்ளது. இதை செயல்படுத்திட கோர் செல் செக்யூரிட்டி முறையை தமிழக காவல்துறை வடிவமைத்து முதல்வர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

ஆனால், யெல்லோ விதிகளுக்கு முரணாக தற்போதைய முதல்வர் விஜய்யின் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்தினுள் அவரது தனி பாதுகாவலரான நயீம் மூஸா வளையவருகிறார்.அப்படியானால் விஜய்க்கு தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் விஜய் ரகசியகாப்பு பிரமாணம் எடுத்துள்ளார்.அதன்படி அவரது கவனத்துக்கு 

தனி பாதுகாவலரால் தடதடக்கும் சர்ச்சைகள்!

வரும் ரகசியங்களை பிறருக்கு தெரிவிக்ககூடாது ஆனால் இப்படி தனி நபர் ஒருவர் முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதாய் அரசு ரகசியங்கள் லீக் ஆகும்  வாய்ப்புள்ளது. எம்.ஜி.ஆர் தனி பாதுகாவலர்களை வைத்திருந்தாலும் அவர்களை இப்படி நிழலாகவே இருக்க அனுமதித்ததில்லை. தமிழ் போலீஸைதான் நம்பினார். அதேப்போல் ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் தனது உதவிக்காக ஒரு பெண்ணான சசிகலாவை உடனிருக்க வைத்தார். ஆனால் ஒரு போதும் பாதுகாப்பு மற்றும் அரசு ஆலோசனைகள் வட்டத்தில் அவரை அனுமதித்தவில்லை. எனவே இதைச் சொல்லி விஜய்யின் செயலை நியாயப்படுத்த முடியாது' என்றார்.

நாம் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா விட இதுகுறித்து கேட்டபோது அரசு சொத்தான ஒரு சின்ன சேஃப்டி பின் விஷயத்தில் கூட மிக கவனமாக இருக்கும் முதல்வர் விஜய் மாநில பாதுகாப்பு விஷயத்திலோ. முதல்வரான தன் பொறுப்புகளிலோ அலட்சியம் காட்டுவாரா? நிச்சயமாக இல்லை விதிகளுக்கு உட்பட்டே முதல்வர் எல்லாவற்றையும் செய்கிறார். படுதோல்வியடைந்துள்ள இரு கட்சிகளும் வெற்று அரசியலுக்காக இதை பேசிக்கொண்டுள்ளனர் என்றனர்.

போகப் போகத் தெரியும்!

எழுதியவர்- எஸ்.சக்தி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User