வால்பாறை அருகே பட்ட பகலில் சாலையில் நடந்து வந்த ஒற்றைக்காட்டு யானை

யானை சாலையில் நடந்து சென்ற தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Dec 16, 2023 - 17:32
Updated: 3 years ago
0 202
வால்பாறை அருகே பட்ட பகலில் சாலையில் நடந்து வந்த ஒற்றைக்காட்டு யானை

கோவை மாவட்ட வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் யானைகள்  கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி வருகிறது. வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சில தினங்களாக ஒற்றைக்காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் பேருந்து வழி மறிப்பதும், குடியிருப்பு அருகில் சுற்றுவதுமாக இருந்து வருகிறது.இன்று மதியம் 2 மணி அளவில் சின்கோனா பெரியகல்லார் சாலையில்  ஒற்றைக்காட்டு  யாணை நடந்து வந்தது. இதை பார்த்த தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பயந்து பாதுகாப்பான இடம் தேடி  ஓடினர். யானை சாலையில் நடந்து சென்ற தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ஒற்றைக் காட்டு யானை பட்டப்பகலில் சாலையில் நடந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User