கொதிகலன் குழாயில் பழுது... 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...

வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Apr 20, 2024 - 19:26
0 329
கொதிகலன் குழாயில் பழுது... 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு...

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 

முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், இரண்டாவது நிலையில் செயல்பட்டு வரும், இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இரண்டாவது நிலையில் உள்ள இரண்டாவது அலகில், கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன், காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, பழுதினை சரி செய்யும் பணியில் அனல் மின் நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருவதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User