காணிப்பாக்கம் விநாயருக்கு 6 கிலோ தங்க பிஸ்கட்கள்..நன்கொடை அளித்த தீவிர பக்தர்கள்...

ஆந்திராவில் உள்ள சுயம்பு விநாயகர் கோயிலுக்கு பக்தர்கள் ஒருவர் 6 கிலோ தங்க பிஸ்கட்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Mar 02, 2024 - 15:32
0 181
காணிப்பாக்கம் விநாயருக்கு 6 கிலோ தங்க பிஸ்கட்கள்..நன்கொடை அளித்த தீவிர பக்தர்கள்...

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் கிராமத்தில் சுயம்பு விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் கருவறை வாயில் கதவுகளுக்கு பொன்முலாம் பூச முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தேவையான சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கக் பிஸ்கட்டுகளை ஆந்திராவை சேர்ந்த ஜக்கா ரவி, மற்றும் ஸ்ரீனிவாஷ் ஆகியோர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

பொன்முலாம் பூசப்பட்ட தகடுகளுக்காக தங்க கட்டிகளை நன்கொடையாக வழங்கியவர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User