கும்பகோணத்திற்கு கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்

5 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

Jan 03, 2024 - 17:05
Updated: 3 years ago
0 244
கும்பகோணத்திற்கு கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்

பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு குட்கா மற்றும் பான்பராக் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து காவல்துறையினர் கும்பகோணம் பழைய அரண்மனை காரத்தெருவில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது வட இந்தியரான லலித்குமார் என்பவரது வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்தன.

 இதனை தொடர்ந்து காவல்துறையினர் லலித் குமார் என்கிற பாபுலால் வீட்டில் இருந்து 40 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா மற்றும் பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக லலித்குமார் என்கிற பாபுலால் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User