அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை? ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!

பள்ளிபாளையம் அருகே நான்கு வயது குழந்தைக்கு அங்கன்வாடி பள்ளியில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததால், பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Jun 09, 2025 - 09:53
0 207
அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை?  ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!
அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை? ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!

சென்னையில் அரசு சேவை இல்லத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை நேர்ந்தது போல,  நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் அருகே 4 வயது குழந்தை அங்கன்வாடியில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(34) கூலி தொழிலாளி இவரது மனைவி வனிதா இந்த தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது. நான்கு வயது பெண் குழந்தையை தார்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் மூர்த்தி கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு  சேர்த்துள்ளார். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மூர்த்தி தனது குழந்தையை அங்கன்வாடியில் இருந்து மதியம்  கூட்டிச் செல்ல வரும் பொழுது பள்ளியில் உள்ளே அங்கு பணி புரியும் ஒருவர் மற்றும் ஒரு ஆண் உள்ளே இருந்துள்ளார். அதை பார்த்துவிட்டு மூர்த்தி தனது குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அன்று இரவு தனது குழந்தையுடன் உறங்கிய பொழுது திடீரென குழந்தை அழுக ஆரம்பித்தது அது தொடர்ந்து அவரது பெற்றோர் என்ன என்று விசாரிக்கும் பொழுது அங்கே இருந்த ஒரு தாத்தா தன்னை பல்வேறு பகுதியில் கடித்து வைத்ததாகவும் கூறியுள்ளது.

தொடர்ந்து அங்கன்வாடி பள்ளி கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் இன்று பெற்றோர் அங்கன்வாடி பள்ளிக்கு வந்து அங்கு பணிபுரியும் ஆயா மட்டும் ஆசிரியருடன் தனது குழந்தைக்கு நேர்ந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து சம்பவத்தை கேள்விப்பட்டு பள்ளிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கன்வாடி குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே அந்த நபரை காட்டுவதற்கு அங்கன்வாடி பணியாளர் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் தந்தை,  அங்கன்வாடியை வேறு இடத்துக்கு மாற்றவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு குறித்த சம்பவம் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User