கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 17, 2024 - 08:14
Updated: 2 years ago
0 172
கைது செய்யப்பட்ட 21 மீனவர்களை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை நேற்று இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், அதே பகுதி அருகே மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீன்வர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தியது. பின்னர், சிறை பிடிக்கப்பட்ட 21 ராமேஸ்வரம் மீனவர்களை நீதிமன்றம் அழைத்துச் சென்றனர். மீனவர்களை வரும் 27 ஆம் தேதி வரை (10 நாட்கள்) சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து 2 நாட்களில் தமிழகத்தை சேர்ந்த 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User