21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன 4  அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்:  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் 'ட்விஸ்ட்' 

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Jun 09, 2026 - 08:44
0 507
21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன  4  அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்:  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் 'ட்விஸ்ட்' 
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் 'ட்விஸ்ட்' 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பும் ஒன்றிணைந்தன. கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கினர். 

இதனைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த மொத்தம் 25 பேரில் 21 பேரை அதிமுக தலைமை மன்னித்துள்ள நிலையில், மீதமுள்ள 4 பேர் மீது கொறடா உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா மற்றும் தாராபுரம் சத்தியபாமா ஆகிய நால்வரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். பதவியை ராஜினாமா செய்துள்ள இந்த 4 பேர் மீதும் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பதை விரைவில் விளக்கமாக அறிவிக்கப் போவதாகச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User