தலைதூக்கும் போதை மாத்திரைகள் விற்பனை...2 இளைஞர்கள் அதிரடியாக கைது...

சென்னை ஓட்டேரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Mar 24, 2024 - 22:01
0 325
தலைதூக்கும் போதை மாத்திரைகள் விற்பனை...2 இளைஞர்கள் அதிரடியாக கைது...

சென்னை ஓட்டேரி பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற இரண்டு இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக  சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி  அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்ட ஓட்டேரி காவல்துறையினர், மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த சச்சிதானந்தன் தெரு பகுதியைச் சேர்ந்த ஜெகன்(20) மற்றும் பென்சீனர் லைன் பகுதியைச் சேர்ந்த ஆசாத்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கத்தி, ஐந்து சிரஞ்சுகள் மற்றும்  வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். சென்னை ஆவடி பகுதியில் கடந்த 17ஆம் தேதி ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் 15,000 போதை மாத்திரைகளை  கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User